Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மம்தாவுக்கு ஸ்டாலின் ஆதரவு: காங்கிரசை பயமுறுத்தவா?

Advertiesment
மம்தாவுக்கு ஸ்டாலின் ஆதரவு: காங்கிரசை பயமுறுத்தவா?
, புதன், 25 ஏப்ரல் 2018 (19:00 IST)
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி நீக்கப்படும் என ஒருசில திமுக தலைவர்களே கூறி வரும் நிலையில் இன்று மாநிலக் கட்சிகளை ஒன்றிணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு, தான் ஆதரவளிப்பதாகத் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு வைக்கப்படும் செக் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 
காங்கிரஸ், பாஜக அல்லாத தேசிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களும் முயற்சி செய்து வருகின்றனர், இந்த முயற்சிக்கு தன்னுடைய ஆதரவு உண்டு என்று இன்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
webdunia
இதுகுறித்து ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தி.மு.க எப்போதும் பிராந்திய கட்சிகளின் ஒற்றுமைக்காகவும் வலிமையான கூட்டாட்சிக்காகவும் துணை நிற்கும். பா.ஜ.க-வின் சர்வாதிகார மற்றும் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு அரசியல் கட்சிகளை இணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சியை நான் ஆதரிக்கிறேன்” எனப் பதிவு செய்துள்ளார். ஸ்டாலினின் இந்த பதிவு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மம்தா பானர்ஜி ஒரு சூர்ப்பனகை: பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு