Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே: பேச்சை தொடக்கிய ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (12:39 IST)
திமுக தலைவர் கருணாநிதி தான் கலந்து கொண்ட அனைத்து பொதுக்கூட்டங்களிலும் தவறாமல் சொல்லும் ஒரு வரி 'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே' என்பதுதான். இதை கருணாநிதி சொன்னவுடன் தொண்டர்களிடம் இருந்து வரும் கைதட்டல் விண்ணை பிளக்கும்
 
இந்த நிலையில் இன்று திமுக செயற்குழு சற்றுமுன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த செயற்குழு கூட்டத்திற்கு திமுகவின் செயற்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
 
இந்த நிலையில் சற்றுமுன்னர் மு.க.ஸ்டாலின் தனது உரையை தொடங்கினார். அவர் தனது உரையை தொடங்கும்போது கருணாநிதி கூறும் 'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே' என்று கூறி பேச்சை தொடங்கினார். இதற்கு அரங்கத்தில் பலத்த கைதட்டல் எழுந்தது.
 
முன்னதாக துரைமுருகன் தனது பேச்சை தொடங்கியபோது, 'விரைவில் தலைவராக உள்ள செயல் தலைவரே என்று கூறியபோது பலத்த கரவொலி எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுக்குநூறான ஹெலிகாப்டர்.. குடும்பத்துடன் பரிதாபமாக பலியான தொழிலதிபர்! - கடைசி வினாடி திக் திக் வீடியோ!

தமிழிசை வீட்டிற்கு திடீரென சென்ற அமித்ஷா.. பாஜக தலைவர் பொறுப்பு அளிக்கப்படுமா?

கனிமொழி கண்டனம் தெரிவித்த சில நிமிடங்களில்.. பொன்முடி பதவி பறிப்பு..!

டிரம்ப் வரிவிதிப்பு ஒத்திவைப்பு எதிரொலி: இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய ஏற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments