Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆனால் முதல் கையெழுத்து பெண்களை தாலியை அறுக்காத அளவுக்கு நான் பார்த்துக்கொள்வேன் என சொன்னார்கள் அது என்ன ஆச்சு- அதிமுக அமைப்பு செயலாளர் சுதா.கே.பரமசிவன் கேள்வி!

ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆனால் முதல் கையெழுத்து பெண்களை தாலியை அறுக்காத அளவுக்கு நான் பார்த்துக்கொள்வேன் என சொன்னார்கள்  அது என்ன ஆச்சு- அதிமுக அமைப்பு செயலாளர் சுதா.கே.பரமசிவன் கேள்வி!

J.Durai

, வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (18:30 IST)
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே  புதியம்புத்தூர் சந்தை திடல் பகுதியில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக சார்பில்  ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்றது.
 
இவ்விழாவில் அதிமுக அமைப்பு செயலாளர் சுதா.கே. பரமசிவன்   கலந்து கொண்டு பேசுகையில்......
 
பேரறிஞர் அண்ணா ஆடம்பரம் இல்லாதவர் எளியவர் ட்ரிபிள்  எம்.ஏ படித்த மாமனிதர் .மேலும் பெரிய தமிழ் ஆற்றல்மிக்க பேச்சாளர் தமிழுக்காக வாழ்ந்தவர். திமுகவினர் யாருக்காக ஆட்சி நடத்துகிறார்கள் என்றால் அவர்களின் குடும்பத்திற்காக மட்டும் ஆட்சி நடத்துகிறார்கள். பணக்காரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் திமுகவை சேர்ந்த சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இந்திய வரலாற்றில் பெண்களுக்காகவே 16 ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்த அம்மா தாலிக்கு தங்கம்,பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார்.
 
திமுக ஆட்சிக்கும் அண்ணா திமுக ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். நீங்கள் ஓட்டு போடுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கொடுப்பார்கள் ஏனெனில் 10 வருடமாக காய்ந்து கிடந்தார்கள் நல்ல வேஷ்டி   திமுக வினருக்கு  கிடையாது ஆனால் தற்போது கொள்ளையடித்து பளபளவென இருக்கிறார்கள்.
 
சப் ரிஜிஸ்டர் ஆஃபீஸ் பக்கம் போக முடியாது மணல் கொள்ளை யாரும்  கேட்க முடியாத நிலையில் உள்ளது. காவல்துறையினர் ரொம்ப நெருக்கடியில் இருக்கிறார்கள் ரவுடிகள் கூடியிருக்கிறார்கள் கஞ்சா வியாபாரம் கூடியுள்ளது .மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக சேர்ந்தவர்கள் யாரோ சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். கொலைக் கொள்ளை  திமுக ஆட்சியில் சர்வசாதாரணம் போலீஸ்க்கு யாரும் பயப்படுவதில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் அதிமுகவினர் போலீஸ்க்கு பயந்து நடந்தோம் ஆனால் திமுக ஆட்சியில் திமுகவினர் போலீசை நீ இருக்கணுமா வேண்டாமா என்று கேட்க கூடிய அளவுக்கு சட்ட ஒழுங்கு மோசமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் கொள்ளை கஞ்சா பள்ளிக்கூடங்களில் கஞ்சா வியாபாரம் நடக்கிறது.
 
தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி கடந்த தேர்தல் பரப்புரையின் போது மது குடிப்பதால் தான் தமிழகத்தில் விதவை பெண்கள் அதிகமாக உள்ளனர். நீங்கள் திமுகவிற்கு வாக்களித்து ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆனால் முதல் கையெழுத்து பெண்களை தாலியை அறுக்காத அளவுக்கு நான் பார்த்துக்கொள்வேன் என சொன்னார்கள். அது என்ன ஆச்சு தற்போது 40 மாதங்கள் ஆகிறது தமிழக முதல்வர் எத்தனையோ கையெழுத்து  போடுகிறார் ஆனால்  மதுவிலக்கிற்கு கையெழுத்து போட முடியவில்லை ஏனெனில் 40 ஆயிரம் கோடி அளவிற்கு மது வியாபாரம் நடக்கிறது.
 
விசிக  தலைவர் திருமாவளவன் மதுவிலக்கு மாநாட்டிற்கு அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் என சொன்னார். சில தினங்களுக்குப் பிறகு  திமுகவும் மதுவிலக்கு மாநாட்டில் கலந்து கொள்ளும் என கூறுகிறார் திமுக ஆட்சிக்கு எதிர்த்து தான் மதுவிலக்கு மாநாடு நடத்துகிறார் ஆனால் திமுகவை மதுவிலக்கு மாநாட்டிற்கு கூப்பிடுகிறார்.தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுகவைச் சேர்ந்த இளங்கோவன் மற்றும் ஆர்எஸ் பாரதி ஆகியோர் வருவார்கள் என கூறியிருக்கிறார் ஆனால் ஜெகத்ரட்சகன் டி ஆர் பாலுவையும் அனுப்ப வேண்டியது தானே அல்லது முதல்வர் ஸ்டாலின் போக வேண்டியது தானே ஏனெனில் சக்கர ஜெகத்ரட்சகன் டீ ஆர் பாலு இருவரும் சாராய பேக்டரி வைத்திருக்கிறார்கள் எனவே அந்த தொழிற்சாலைகளை மூட முடியாது ஏன்னா மூடினால் அவர்களுடைய வருமானம் பாதிக்கும் எனவே அதெல்லாம் ஒரு ஏமாத்து வேலை.
 
வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் கொள்ளையடித்து வைத்திருக்கும் பணத்தை வைத்து ஓட்டுக்கு 2000 கொடுத்து  தான் ஜெயித்து முதலமைச்சராக வேண்டும்  என்ற முடிவில் இருக்கிறார் .நீங்கள் 2000 ரூபாய் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலில் யார் நல்லவங்க யார் கெட்டவங்க அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும் என பேசினார்.
   
இந்நிகழ்ச்சியில்  அதிமுக
முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவினர் நடத்திய பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் பிரியாணிக்காக அடி உதை!