Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 11 April 2025
webdunia

திமுகவினர் நடத்திய பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் பிரியாணிக்காக அடி உதை!

Advertiesment
Kicked for biryani

J.Durai

, வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (18:20 IST)
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த நந்தினி மஹாலில்  திருப்பத்தூர் மாவட்ட திமுகவினர் பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்செழத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 
 
நிகழ்ச்சி முடிந்த பின்பு  இந்த பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் கலந்துகொண்ட திமுகவினருக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது. 
 
அப்போது திமுகவினர் சிலர் டேபிளில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டதாகவும் தெரிகிறது அதனைத் தொடர்ந்து மற்றொரு சிலர் தரையில அமர்ந்து பிரியாணி சாப்பிட்டு வந்ததாக தெரிகிறது
 
அதன் பின்பு தரையில் அமர்ந்த திமுகவினர் தங்களுக்கு பிரியாணி வழங்க வேண்டும் என சர்வர் செய்யும் இளைஞர்களிடம் கேட்டபோது பிரியாணி பரிமாறாதால் ஆத்திரமடைந்த திமுகவினர் திடீரென சில இளைஞர்களை பிடித்து சாரா மாறியாக தாக்கியுள்ளனர் இதன் காரணமாக இந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாமன்னன் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி கொடுப்பார் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்!