Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதிமுக மாநாட்டிற்கு திடீரென வரமறுத்த ஸ்டாலின்: அதிர்ச்சியில் வைகோ

Advertiesment
மதிமுக மாநாட்டிற்கு திடீரென வரமறுத்த ஸ்டாலின்: அதிர்ச்சியில் வைகோ
, சனி, 15 செப்டம்பர் 2018 (07:39 IST)
ஒரு கட்சியின் தலைவர் இன்னொரு கட்சியின் தலைவர் முதல்வராக பாடுபடுகிறார் என்றால் அது மதிமுக பொதுச்செயலாளர் வைகோதான் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வரும் நிலையில் மதிமுக நடத்தவுள்ள முப்பெருவிழாவிற்கு மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா மற்றும் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் பொதுவாழ்வு பொன் விழா என மூன்றும் சேர்த்து, முப்பெரும் விழா மாநில மாநாடு இன்று ஈரோட்டில் நடைபெறவிருக்கிறது

இந்த மாநாட்டுக்கு ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் சரத் பவார், முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி ஆகியோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என்று வைகோ அடிக்கடி கூறி வரும் நிலையில் தி.மு.க-வின் தலைவர் ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஸ்டாலினும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக உறுதி அளித்திருந்தார்

webdunia
ஆனால் திடீரென தன்னால் இந்த மாநாட்டிற்கு வர முடியாது என்று ஸ்டாலின் வைகோவிடம் கூறிவிட்டதாகவும், இதனால் வைகோ அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இருப்பினும் திமுக பொருளாளர் துரைமுருகன் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரை நிர்வாணத்துடன் வெளிநாட்டு பெண்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு