அதிமுக அரசின் ஊழல் குறித்த செய்திகள் ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், திமுகவினரின் அராஜகங்கள் குறித்த செய்திகளும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
சென்னை ஓட்டல் ஒன்றில் பிரியாணி கேட்டு திமுக பிரமுகர் யுவராஜ்சிங் என்பவர் செய்த அடிதடியினால் ஓட்டல் முதலாளி மற்றும் ஊழியர்கள் தாக்கப்பட்டனர். இந்த விவகரத்தின் போது ஸ்டாலின் நேரடியாக அந்த கடைக்கு சென்று வருத்தம் தெரிவித்ததோடு, யுவராஜ்சிங் மீதும் நடவடிக்கை எடுத்தார்.
இதனையடுத்து திமுக வழக்கறிஞர் ஒருவர் ஓசி பரோட்டா கேட்டு இன்னொரு ஓட்டல் ஒன்றின் முதலாளியை அரிவாளாள் காட்டி மிரட்டியதாக செய்தி வெளிவந்தது.
இதனையடுத்து செல்போன் கடை உரிமையாளரை தாக்கி திமுக நிர்வாகி ஒருவர் மண்டையை உடைத்த செய்தியும், திமுக எம்.எல்.ஏ ஒருவர் காவல்துறை அதிகாரியை பட்டப்பகலில் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில் தற்போது அழகு நிலையத்தில் புகுந்து பெண் ஒருவரை சரமாரியாக திமுக முன்னாள் கவுன்சிலர் ஒருவர் தாக்கியது பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற விவகாரங்களால் ஸ்டாலின் அப்செட்டாக உள்ளதாக தலைமையின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் என யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில், பெரம்பலூரில் பெண்மணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தனிப்பட்ட பிரச்சினைகள், விருப்பு வெறுப்புகளை கொண்டு இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடுபவர்களை தி.மு.க அனுமதிக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.