மாயா பஜார் படத்தின் ரீமேக்கின் படப்பிடிப்புப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்துகொண்டிருக்கிறார் சுந்தர் சி. அதற்கு மிக முக்கியக் காரணம் அவரது படங்கள் தயாரிப்பாளர்களுக்கு மினிமம் கியாரண்டியாக அமைகின்றன. அதுமட்டுமில்லாமல் தனது பெரும்பாலான படங்கள் ஏதாவது வேறு மொழி படங்களின் ரீமேக் அல்லது தழுவலாக இருக்கும். அதனால் குறைந்த பட்ச வெற்றி அவர் படத்தில் உறுதியாகி விடுகிறது.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் கன்னட இயக்குனர் ராதாகிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் ராஜ் பி.ஷெட்டி, பிரகாஷ் ராஜ், சுதா ராணி, அச்யூத் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கன்னடப் படமான மாயாபஜார் 2016 என்ற படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தனது உதவியாளர் பத்ரியின் இயக்கத்தில் உருவாக்கி வருகிறார். இதில் பிரச்சன்னா மற்றும் ரைசா நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது.
 
									
											
							                     
							
							
			        							
								
																	ஆனால் தொடங்கிய வேகத்தில் இப்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். இன்னும் சில நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிய உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் தீபாவளி அன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது.