Publish Date: Wed, 25 Aug 2021 (11:37 IST)
Updated Date: Wed, 25 Aug 2021 (11:46 IST)
மதுரையில் கலைஞர் நூலகம் அமையவுள்ள இடம் பென்னி க்விக் இல்லம் என அதிமுகவினர் சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திமுக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் மதுரையில் கலைஞர் பெயரில் மிகப்பெரிய நூலகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அதிமுகவினர் அந்த நூலகம் அமையவுள்ள இடம் பென்னி க்விக் இல்லம் என செய்திகள் வெளியாகின்றன. அவ்வாறு செய்வது கண்டிக்கத் தக்கது என சட்டமன்றத்தில் பேசியிருந்தனர்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பென்னிகுவிக் இல்லம் என்பதற்கான ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள் அதனை மாற்ற அரசு தயாராக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.