ஸ்டாலின் தனது ஆட்சியை நம்பவில்லை என்றும் கூட்டணி கட்சிகளை தான் நம்பி உள்ளார் என்றும் நாம் கடுமையாக உழைத்தால் திமுக கூட்டணி கட்சியினர் நம்மை தொடர்பு கொள்ள தொடங்குவார்கள் என்றும் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கேபி முனுசாமி பேசினார்.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் என்று சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர் இந்நிலையில் இந்த கூட்டத்தில் கேபி முனுசாமி பேசியதாவது:
ஸ்டாலின் தனது ஆட்சியை கூட நம்பவில்லை, கூட்டணியை தான் நம்பி இருக்கிறார். நாம் கடுமையாக உழைத்தால், திமுக கூட்டணி கட்சியினர் நம்மை தொடர்பு கொள்ள தொடங்குவார்கள்
தகவல் தொழில்நுட்பங்களை இளைஞர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 17 மாதமே உள்ளது, களத்தில் வெற்றி கனியை பறிக்க தயாராக வேண்டும்
நிர்வாகிகளுக்கு பொருளாதார வசதி இல்லை என்றால், கடன் வாங்கியாவது அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும்