Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து மாபெரும் போராட்டம்: ஸ்டாலின் அதிரடி

குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து மாபெரும் போராட்டம்: ஸ்டாலின் அதிரடி
, சனி, 22 ஜூன் 2019 (19:09 IST)
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்க வலியுறுத்தும் வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 24 ஆம் தேதி போராட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் தன்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. முக்கியமாக சென்னையில் பல பகுதிகளில் குடிநீர் தட்டுபாட்டால் மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

தமிழக கிராமங்களில், மக்கள் குடிநீருக்காக பல மைல் தூரம் வெயிலில் நடந்து சென்று கால்வாய்களிலும், சுனைகளிலும், கல் குவாரிகளிலும் நீர் எடுத்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சனையால் மக்கள் காலி குடங்களுடன் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தண்ணீர் பற்றாக்குறையால், பல பள்ளிகளுக்கும், தொழில் நிறுவனத்திற்கும், விடுதிக்கும் தற்காலிகமாக விடுமுறையும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் வருகிற 24 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு காலை 09.30 மணியளவில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கவிருப்பதாக திராவிட முன்னேற்ற கழகம் இன்று அறிவித்துள்ளது.

மேலும் மக்களின் குடிநீர் பஞ்சத்தை போக்க மாநில அரசு உடனே செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

தி.மு.க. ஆட்சியில் குடிநீர் தட்டுபாடு தொடர்பாக பல திட்டங்களை அப்போதைய கருணாநிதி அரசு அமைத்திருந்தது என்றும், தற்போது உள்ள எடப்பாடியின் அரசு மத்திய அரசுடன் சேர்ந்து கொண்டு தமிழக மக்களை வஞ்சிக்கிறது என்றும், பல முறை ஸ்டாலின் குற்றம் சாட்டிவந்தார்.

இந்நிலையில் தற்போது நடக்கவிருக்கிற இந்த போராட்டம், ஸ்டாலினின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கான முயற்சியாக இருக்கும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லும்போது உயிர்த்தெழுந்த பிணம்:அதிர்ந்து போன மருத்துவர்கள்