Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உதயநிதிக்காக ராஜினாமாவா..? உண்மை உடைத்த இளைஞரணி செயலாளர் சாமிநாதன்!!

Advertiesment
உதயநிதிக்காக ராஜினாமாவா..? உண்மை உடைத்த இளைஞரணி செயலாளர் சாமிநாதன்!!
, சனி, 22 ஜூன் 2019 (14:27 IST)
திமுக இளைஞரணி செயலாளர் பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை என சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
 
கடந்த மக்களவை தேர்தலின்போது தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து திமுக கூட்டணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின். 
 
எனவே, உதயநிதிக்கு திமுகவில் பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் தனக்கு திமுகவின் அடிமட்ட தொண்டனாக இருப்பதே விருப்பம் என்றும் பதவி தேவையில்லை என்றும் உதயநிதி கூறி வருகின்றார்.
 
இப்படி இருக்கையில் திமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் திமுகவின் இளைஞரணி மாநில செயலாளருமான சாமிநாதன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என செய்திகள் வெளியானது. 
webdunia
அதோடு, அவர் ராஜினாமா கடிதத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தகாவும், ஸ்டாலின் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாகவும் திமுக வட்டாரங்களில் செய்திகள் வெளியானது. 
 
ஆனால், நான் எனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என சாமிநாதன் தெரிவித்துள்ளார். சாமிநாதம் தெரிவித்தது பின்வருமாறு, இளைஞரணி மாநில செயலாளர் பதவியை தற்போது வரை நான் ராஜினாமா செய்யவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் அந்த பதவிக்கு புதியவரை நியமிக்கலாம் என்றும் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணன் ன்னு நம்பிதான் என் பொண்ண அனுப்புனேன், ஆனா அவன்……..