Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எங்கே பார்த்தாலும் தண்ணீர் பஞ்சம் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

எங்கே பார்த்தாலும் தண்ணீர் பஞ்சம் -  மு.க.ஸ்டாலின் விமர்சனம்
, வியாழன், 13 ஜூன் 2019 (21:19 IST)
கரூர் அருகே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பொதுமக்களிடம் நன்றி தெரிவித்தார். அப்போது மு.க.ஸ்டாலினிடம் சரமாரி பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களிலும், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் தி.மு.க கூட்டணி கட்சி அதிகப்பெரும்பான்மையான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க வை சார்ந்த செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். 
 
வெற்றி பெற்றதை தொடர்ந்து., அந்த தொகுதிக்குட்பட்ட தவிட்டுப்பாளையம், கிழக்கு தவிட்டுப்பாளையம், நொய்யல், சின்னதாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலைமுதல் மதியம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். அப்போது,. எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியும், கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியும், தி.மு.க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். 
 
அப்போது, தவிட்டுப்பாளையம் பகுதியில் திண்ணை பிரச்சாரத்தில்., தமிழகம் முழுவதும் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டினால் பெருமளவில் கஷ்டப்பட்டு வருகின்றனர் என்றும், ஆங்காங்கே காலிக்குடங்களை வைத்து சாலைமறியல் செய்வதும் என்றும், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இதே குடிநீர் தட்டுப்பாட்டின் போது., தி.மு.க., ஆட்சியில் இருக்கும் போது கூட்டுக்குடிநீர் திட்டங்களை கொண்டு வந்து சிறப்பான முறையில் தண்ணீர் தந்தது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை, உள்ளாட்சி தேர்தல் நடத்தி 8 வருடம் ஆகின்றது. ஆகவே நீதிமன்றம் சென்று உள்ளாட்சி தேர்தலை நடத்திட கோரி சென்றுள்ளோம் என்றும், நீதிமன்றமும் நடத்த கோரி உத்திரவு போட்டுள்ளது. 
 
இந்த ஆட்சி நிலைத்திருக்குமோ, இல்லையோ ஒன்றரை வருடங்களில் மீண்டும் தமிழகத்தில் பொதுத்தேர்தல் வரும் அப்போது இப்போது எங்களுக்கு எவ்வாறு ஆதரவு தருகின்றீர்களோ, அவ்வாறே ஆதரவு கொடுக்க வேண்டுமென்றார். அப்போது மக்கள் எப்போதும் எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு என்றும், இந்த சேலம் டூ மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதாகவும், ஆகவே உடனே மேம்பாலம் கட்டித்தரவேண்டுமென்றும், இதே பகுதியில் தடுப்பணை கட்டித்தரவேண்டுமென்றும், இதே பகுதி மக்கள் ஏராளமானோர் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி விட்டோம், 65 வருடங்களாக இதே பகுதியில் குடியிருக்கும் எங்களுக்கு பட்டா இல்லை என்றும் அதை உங்கள் ஆட்சியில் நிறைவேற்றித்தர வேண்டுமென்றும் அந்த பகுதி மக்கள் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுக்கெல்லாம் கட்சி பொறுப்பேற்க முடியாது! கல்லூரி மாணவி தற்கொலை குறித்து திருமாவளவன்