Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு – புதிய தேர்வு அட்டவணை விவரங்கள்!

Webdunia
செவ்வாய், 19 மே 2020 (11:48 IST)
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 1 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்வுகளை ஒத்தி வைத்திருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டன. பிறகு அடுத்த மாதம் ஜூன் முதல் தேதியிலிருந்து பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த நாளே தேர்வுகள் தொடங்குவதில் உள்ள சிரமங்களை பல கட்சிகளும், மக்களும் கூறி வந்தனர். இந்நிலையில் இன்று முதலைமைச்சருடன் ஆலோசித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வுகளை ஒத்தி வைத்து புதிய தேர்வு அட்டவணையை வழங்கியுள்ளார்.

அதன்படி ஜூன் 15ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க இருக்கின்றன.

ஜூன் 15 – மொழிப்பாடம்
ஜூன் 17 – ஆங்கிலம்
ஜூன் 18 – கணிதம்
ஜூன் 22 – அறிவியல்
ஜூன் 24 – சமூக அறிவியல்

மேலும் ஜூன் 20ல் விருப்பப்பாடமும், ஜூன் 25ல் தொழில்கல்வி தேர்வுகளும் நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments