Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுரையைத் தவிர அனைத்து எய்ம்ஸ்களும் திறக்கப்பட்டு விட்டன.. சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்

மதுரையைத் தவிர அனைத்து எய்ம்ஸ்களும் திறக்கப்பட்டு விட்டன.. சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்

Mahendran

, செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (14:27 IST)
பிரதமர் மோடி இன்று 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைத்த நிலையில் மதுரையை தவிர அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளும் திறக்கப்பட்டு விட்டன என சு.வெங்கடேசன் எம்பி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
அடுத்த ஆறு நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார் பிரதமர் . 
ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ்களும் திறக்கப்பட்டு விட்டன மதுரையைத் தவிர .  தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா ?
 
கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் தொடங்கி முடிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கு முன்னதாக இந்த மருத்துவமனைகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
 
குறிப்பாக காஷ்மீரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019ம் ஆண்டில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில் ரூ.1660 கோடி செலவில் 227 ஏக்கர் பரப்பளவில் அங்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இன்று காஷ்மீர் செல்லும் பிரதமர் இந்த மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
 
தொடர்ந்து பிப்ரவரி 25ம் தேதியன்று ஒரே நேரத்தில்  ராஜ்கோட், ஆந்திராவின் மங்களகிரி, பஞ்சாபின் பதிண்டா, உத்தரபிரதேசத்தின் ரேபரேலி மற்றும் மேற்கு வங்கத்தின் கல்யாணி ஆகிய பகுதிகளில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்படவுள்ளன.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காசாவில் செத்து மடியும் மக்கள்..! 29 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை...!!