Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு! – நடுக்கடலில் அட்டூழியம்!

Advertiesment
பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு! – நடுக்கடலில் அட்டூழியம்!
, வெள்ளி, 25 ஜூன் 2021 (14:51 IST)
மீன்பிடிக்க சென்ற பாம்பன் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிசூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், படகுகள், வலைகளை சேதப்படுத்துவதும் மீனவர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. தற்போது மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

இந்நிலையில் பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் பலர் 27 கி.மீ தொலைவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கிசூடு நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 400க்கும் மேற்பட்டோர் கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆதிமனித வரலாறு: ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆதி மனித இனம் -மண்டை ஓட்டில் வெளியான ரகசியம்