இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: தேர்தல் தேதி அறிவிப்பு..!

Siva
புதன், 25 செப்டம்பர் 2024 (07:35 IST)
இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளதை அடுத்து, தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால், இலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க அதிபர் அநுர குமார திசநாயக உத்தரவிட்டுள்ள நிலையில், அந்நாட்டில் நவம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்த நிலையில், அந்த தேர்தலில்  அநுர குமார திசநாயக வெற்றி பெற்று, நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார்.

இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தல் மூலம் ஆட்சி அமைக்க விரும்புவதாக கூறிய புதிய அதிபர்  அநுர குமார திசநாயக, அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். மேலும், நவம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என முறையாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடந்த நிலையில், இன்னும் 11 மாத காலம் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இருந்தாலும், முன்கூட்டியே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அந்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments