கடந்த சில வாரங்களுக்கு முன் இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கி காயப்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், 14 மீனவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் பைபர் படகில் நேற்று கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றபோது, அங்கு இரண்டு படகுகளில் திடீரென வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மீன்பிடி வலைகள், மீன்கள், GPS கருவிகள், செல்போன்கள் என பல லட்சம் மதிப்பிலான உபகரணங்களை கொள்ளையடித்து சென்றதாகத் தெரிகிறது.
மேலும், இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் காரணமாக பலத்த காயமடைந்த 14 மீனவர்கள் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் மூன்று வெவ்வேறு இடங்களில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி இருப்பது மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்குத் தகுந்த நடவடிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.