Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லிட்டில் பிளவர் பள்ளியில் விளையாட்டு விழா

karur
, திங்கள், 30 அக்டோபர் 2023 (21:13 IST)
கரூர் மணவாடி லிட்டில் பிளவர் பள்ளியில் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
 
கரூர் அடுத்துள்ள மணவாடி பகுதியில் அமைந்துள்ள லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டே எனப்படும் விளையாட்டு தின விழா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் பினு கே.ஜோசப் இந்நிகழ்ச்சியினை தலைமை ஏற்று துவக்கி வைத்தார்.

பள்ளியின் துணை முதல்வர் சத்யபிரியா, பள்ளியின் கல்வி ஆலோசகர் ஜோசப் கே.ஜே மற்றும் பள்ளியின் பொருளாளர் திலீப் ஆகியோர் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியும், இந்திய அளவிலான சாதனை விளையாட்டு வீரருமான விஜயகுமார் கலந்து கொண்டு விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து மாணவ, மாணவிகளிடம் உரையாற்றினார். அப்போது அவர், கடந்த 1988 ம் ஆண்டு 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தினை 10 மாதங்களாக நடந்தே சென்று சாதனை செய்ததாகவும், திருச்சியில் தொடங்கி சென்னை வழியாக காஷ்மீர் சென்று மீண்டும் காஷ்மீரிலிருந்து திருச்சிக்கு லெப்ட் அண்ட் ரைட் ஆக சுற்றி வந்ததால் இன்றும் எனது பெயர் இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவில் நிலைத்து இருக்கின்றது என்றும், விளையாட்டு என்பது நமது உடல் வலிமையை மேற்கொள்ளும் ஒரு ஒரு மாபெரும் சக்தியாகும்,. ஆகவே அனைவரும் கல்வியோடு விளையாட்டையும் கற்று நன்கு தேர்ச்சி பெற வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து விளையாட்டு விழாவினை துவக்கி வைத்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி விஜயகுமார் அனைவரையும் உற்சாகப்படுத்தியதோடு, ஒவ்வொரு பிரிவிலும் பிரிவு வாரியாக விளையாடிய விளையாட்டு வீர்ர், வீராங்கனைகளை ஊக்குவித்தார். மேலும், இந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் மணவாடி லிட்டில் பிளவர் மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசியன் பாரா விளையாட்டில் 111 பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்கள்! - அமைச்சர் உதயநிதி பாராட்டு