மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு செல்ல முதல்முறையாக சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தற்போது தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த திருவிழாவின் சிகர நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மே 12ம் தேதி நடைபெறுகிறது. ஒட்டுமொத்த தென் மாவட்ட மக்களும் கூடும் இந்த விழா வெகு பிரபலமாக உள்ள நிலையில் சமீபமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அழகரை தரிசிக்க மக்கள் செல்கின்றனர்.
அதை கருத்தில் கொண்டு முதல்முறையாக கள்ளழகர் திருவிழாவிற்கு சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. இந்த சிறப்பு ரயிலானது நாளை (மே 10) இரவு 11.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு மதுரையை சென்றடையும். அதேபோல மறுமார்க்கமாக மே 12ம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.50 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K