பாலியல் வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை பெற்ற நாகர்கோவில் காசி, தற்போது கந்துவட்டி புகாரில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளன.
நாகர்கோவில் காசி மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியன் ஆகிய இருவர் மீது கந்துவட்டி புகார் அளிக்கப்பட்ட நிலையில், இது குறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், நாகர்கோவில் காசிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் இடைதரகர் நாராயணன் என்பவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில், நாகர்கோவில் காசிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது தொகையை பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்றும் அந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது.