Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மழை வேண்டி சிறப்பு தொழுகை

J.Durai
திங்கள், 29 ஏப்ரல் 2024 (14:44 IST)
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் வெயிலில்  தாக்கம் அதிகமாகி  கடுமையான வறட்சி நிலவி வருவதால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி உள்ள அருவிகளில் முற்றிலுமாக தண்ணீர் வரத்து இன்றி வெறும் பாறைகளாக காட்சியளிக்கின்றது.
 
தேனி, திண்டுக்கல்,மதுரை, சிவகங்கை உள்ளிட்ட  5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு முற்றிலும் நீர்வரத்து இன்றி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது, இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
மேலும்  நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால்  மானாவரி நிலங்களில் மக்காச்சோளம், சோளப் பயிர்கள் மழை இல்லாமல் துவண்டு வருவதால் கால்நடைகளுக்கு தீவனங்கள் கிடைக்காமல்  விவசாயிகள்  பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
 
இதனால் கம்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கம்பம் கிளை சார்பாக மார்க்க அறிஞர் பஷீர் அகமது தலைமையில்  இப்பகுதியில் வரட்சி நீங்கி மழை பெய்வதற்கு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
 
இந்த சிறப்பு தொழுகையில்  ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என சுமார் 100க்கும் மேற்பட்ட  நபர்களுக்கு மேல் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments