மே மாதம் முதல் வாரம் அக்னி நட்சத்திரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதே வாரத்தில் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பல மாவட்டங்களில் அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்நிலையில் மே முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் என்றும் 28 நாட்களுக்கு வெயில் உச்சக்கட்டத்தில் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மே இரண்டாம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மற்றும் அதை ஒட்டிய தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
ஆனால் அதே நேரத்தில் ஏனைய தமிழகத்தில் உள்ள மாவட்டங்களிலும் புதுவை உள்ளிட்ட பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவும் என்றும் தமிழகத்தின் ஒரு சில படங்களை இடங்களில் மட்டும் மே 3ஆம் தேதியும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது