தமிழகத்தில் நாளை முதல் 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் அதிகம் பரவி வரும் நிலையில், இதைத் தடுக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், நாளை தமிழகம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
தமிழகம் முழுவதும் நாளை 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்படும்,
காய்ச்சல், சளி,இருமல் உள்ளிட்ட ஏதேனும் பாதிப்புகள் இருந்தால், முகாமில் முகாமுக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.