Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுதந்திர தின விடுமுறை: சென்னையில் இருந்து 2,643 பேருந்துகள்.. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள்..!

bus
, சனி, 12 ஆகஸ்ட் 2023 (11:04 IST)
சனி ஞாயிறு மற்றும் சுதந்திர தின விடுமுறையை அடுத்து சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன என்பதை பார்த்தோம்.  
 
ஏற்கனவே 2,100 பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சென்ற நிலையில் கூடுதலாக 543 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் மொத்தம் உள்ள 2643 பேருந்துகளில் 1,32,150  பேர் பயணம் செய்துள்ளதாகவும் போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. 
 
வார இறுதி விடுமுறை மற்றும் சுதந்திர தின தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக நேற்று சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட்டன என்பதும் இந்த பேருந்துகளில் பயணிகள் பயணம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  
 
பேருந்து பயணிகளுக்கு வசதிக்காக நேற்று சென்னை மெட்ரோ ரயில் ஆறு நிமிடத்திற்கு ஒருமுறை ரயில்களை இயக்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவை திமுக மானபங்கப்படுத்தவில்லை! அது ட்ராமா! – 1989 சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின்!