Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வார விடுமுறை காரணமாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 26 ஜூலை 2024 (11:04 IST)
சனி ஞாயிறு வார விடுமுறை அடுத்து சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 
 
வார விடுமுறையை ஒட்டி இன்று முதல் 28ஆம் தேதி வரை சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
 
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, கோவை, நெல்லை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 260 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும் என்றும் நாளை 290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
 
அதேபோல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய நகரங்களுக்கு இன்றும் நாளையும் 65 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் திருப்பூர் கோவை பெங்களூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் 200 சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்ய www.tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும், போக்குவரத்து துறையின் மொபைல் செயலின் மூலம் பயணிகள் தங்கள் டிக்கெட்டை உறுதி செய்து கொள்ளலாம் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புது சிம் வாங்கியவருக்கு விராட் கோலியிடமிருந்து வந்த ஃபோன் கால்! வீட்டிற்கு வந்த போலீஸ்! - என்ன நடந்தது?

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

அடுத்த கட்டுரையில்
Show comments