திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: எந்தெந்த நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்து?

Siva
சனி, 2 நவம்பர் 2024 (08:55 IST)
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற இருப்பதை முன்னிட்டு, சென்னை உள்பட பல நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு அடுத்த வாரம், திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுகிறது, இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அந்த வகையில், இந்த ஆண்டும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு நவம்பர் 6ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நவம்பர் 6ஆம் தேதி சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து நேரடியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல், நவம்பர் 7ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், பெங்களூரு, ஆர்.கே.நகர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இந்தப் பேருந்துகளில் திருச்செந்தூருக்கு சென்று வர, www.tnstc.in என்ற இணையதளம் மற்றும்  tnstc official செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.2400 உயர்வு..!

பங்குச்சந்தையில் முதலீடு என ரூ.10 கோடி ஏமாந்த வழக்கறிஞர்.. நூதன மோசடி

டெல்லி குண்டுவெடிப்பை பயமுறுத்தி மோசடி.. போலீஸ் போல் நடித்து மிரட்டல்...!

காருக்குள் சிக்கிய ஒட்டகம்.. 2 மணி நேரம் போராடி ஜேசிபி உதவியுடன் மீட்பு..!

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments