Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்துக்களுக்கு எதிராக பேசிய கிருஸ்தவ மதபோதகர் மீது வழக்கு...

Advertiesment
இந்துக்களுக்கு எதிராக பேசிய கிருஸ்தவ  மதபோதகர் மீது வழக்கு...
, புதன், 3 அக்டோபர் 2018 (19:39 IST)
சமீப காலமாகவே ஒருமதத்தினர் இன்னொரு மதத்தினரை தாக்கி பேசுவதும், மதச்சார்பற்ற புனிதமான நமது  பாரத தேசத்திலே மதத்தைதூண்டும் விதமாக பலர் பேசி சர்ச்சைகளில் சிக்குவதும் தொடர்கதையாகி வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக இப்போது பிரபல கிருஷ்தவ மத போதகரான மோகன் சி லாசரசஸும் சேர்ந்துள்ளார். சில நாட்களூக்கு முன்பு இந்து கடவுள்களை அவர் தவறாக பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோயம்முத்தூர் ,பொள்ளாச்சி போன்ற இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டன.
 
அதனால் அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(ஏ) (1) (ஏ) மற்றும் 295(ஏ) போன்ற பிரிவுகளில் லாசரஸ் மீது வழக்கு பதியப்பட்டது.
 
லாசரஸ் பேசும் வீடியோவும் வெளியானதால் அவரை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களிலும் இதுபோல் அவருக்கு  ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குகள் பதியப்பட்டுவருகின்றன.
 
எனவே அவரைப்பிடிக்க தனி காவல் படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர் பிடிபடுவார் எனவும் செய்திகள் வெளியாகின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவின் ஆயுதமா விஜய்? சர்கார் பின்னணியில் உள்ள அரசியல் யாருடையது?