Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்ச்சுக்கு சென்ற திருப்பதி தேவஸ்தான் பெண் அதிகாரி உள்பட 44 பேர் திடீர் இடமாற்றம்

Advertiesment
ஹிந்து அல்லாதவர்கள் | திருமலை | திருப்பதி தேவஸ்தானம் | Tirupati Devasthanam | tirumala | Non Hindu Employees
, திங்கள், 8 ஜனவரி 2018 (00:54 IST)
உலகிலேயே அதிக வருமானம் வரும் கோவில்களில் ஒன்று திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில். இந்த கோவில் இந்துக்களின் கோவிலாக இருந்தாலும் இதில் பல்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் அதிகாரிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் திருப்பதி தேவஸ்தான பெண் அதிகாரி ஒருவர், தேவஸ்தானம் கொடுத்த காரில் சர்ச்சுக்கு சென்று வருவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அந்த பெண் அதிகாரி உள்பட 44 வேறு மதத்தை சேர்ந்தவர்கள்  ஆந்திர அரசின் வேறு துறைகளுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை கோவில் விதிமுறைகளின்படி, இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே, கோவிலில் பணியாற்ற முடியும் என்று கூறப்பட்டுள்ளதால் பிற மதத்தை சேர்ந்தவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் இந்த திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தியாகராஜா ஆராதனா நிகழ்ச்சி ஒளிபரப்பை திடீரென நிறுத்திய தூர்தர்ஷனுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்