காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நாளை சட்டசபைக்கு வரலாமா? சபாநாயகர் தகவல்

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (13:57 IST)
இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரின்போது நீட் தேர்வு குறித்து காரசாரமான விவாதம் நடந்தது. அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையேயும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் இடையேயும், காரசாரமான வாக்குவாதம் நடந்தது
 
இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ ஒருவர் இது குறித்து பேசிய போது காங்கிரஸ் கட்சியின் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மனைவி நளினி சிதம்பரம் தான் நீட் தேர்வுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடினார் என்ற கருத்து தெரிவித்தார் 
 
இதற்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் அருகே வந்து கூட்டமாக கோஷமிட்டனர். இதனை அடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரையும் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதை அடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.
 
இந்த நிலையில் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நாளை சட்டசபைக்கு வரலாம் என சபாநாயகர் தகவல் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமல்ஹாசன் கட்சியின் டார்ச் லைட் சின்னத்திற்கு திடீர் சிக்கல்.. என்ன காரணம்?

நெல்லை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் நயினார் நாகேந்திரன்? அவரே அளித்த பதில்..!

அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி.. எங்களை பார்த்தால் பாவமாக இல்லையா? ஓபிஎஸ் பேட்டி

சென்னை நந்தனம் கல்லுரியில் பெண் பாலியல் பலாத்காரம்!.. 3 பேர் கைது!...

நான் எம்.பி ஆவது முக்கியமல்ல!.. எல்லாம் உங்களுக்காகதான்!.. விஜய பிரபாகரன் ஃபீலிங்!...

அடுத்த கட்டுரையில்
Show comments