Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்மேற்கு பருவமழை - எதிர்பார்ப்பதை விட அதிக மழை கொடுக்கும்!!

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (10:00 IST)
தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கியுள்ள நிலையில் எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

 
இந்தியா முழுவதும் கோடைக்காலம் நடைபெற்று வந்த நிலையில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வந்தது. இடையே வங்க கடலில் ஏற்பட்ட புயலால் பல பகுதிகளில் நல்ல மழையும் பெய்தது. தற்போது கோடைக்காலம் முடிவை நெருங்கியுள்ள நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
 
கணிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
 
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு பருவமழை காலத்தில் மழை அளவு நீண்ட கால சராசரியில் 103% ஆக இருக்கும். இது எதிர்பார்க்கப்பட்ட அளவை விட அதிகம்.
 
குறிப்பாக தெற்கு மற்றும் மத்திய இந்திய பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாகவும், வடகிழக்கு பகுதிகளில் குறைவாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக தகவல். 

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments