11ம் தேதி முதல் முன்பதிவில்லா ரயில் சேவைகள்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (10:02 IST)
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த முன்பதிவில்லா ரயில் சேவைகளில் சிலவற்றை மீண்டும் தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கடந்த சில காலமாக கொரோனா பாதிப்பால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஜூலை 11ம் தேதி முதல் சில முன்பதிவில்லா ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருப்பதி – காட்பாடி ரயில் – திருப்பதியில் காலை 10.55 மணிக்கும், காட்பாடியில் இரவு 9.55 மணிக்கும் புறப்படும்.

விழுப்புரம் – மயிலாடுதுறை ரயில், விழுப்புரத்தில் மதியம் 2.25 மணிக்கும், மயிலாடுதுறையில் காலை 6 மணிக்கும் புறப்படும்.

விழுப்புரம் – புதுச்சேரி இடையேயான இரண்டு முன்பதிவில்லா ரயில்கள் விழுப்புரத்தில் காலை 5.30 மணிக்கு ஒன்றும், மாலை 5.50 மணிக்கு ஒன்றும் புறப்படும். மீண்டும் புதுச்சேரியிலிருந்து காலை 8.10 மணிக்கு ஒன்றும், மற்றொன்று இரவு 7.45 மணிக்கும் புறப்படும். இந்த ரயில் சேவைகள் ஜூலை 11 முதல் தினசரி செயல்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments