Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரயில் வருதுன்னு கண்டுக்காம க்ராஸ் பண்றாங்க! – மதுரை கோட்ட மேலாளர் வேதனை!

Advertiesment
ரயில் வருதுன்னு கண்டுக்காம க்ராஸ் பண்றாங்க! – மதுரை கோட்ட மேலாளர் வேதனை!
, வியாழன், 16 ஜூன் 2022 (13:59 IST)
மதுரை – தேனி இடையே ரயில் சேவை இயக்குவதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாக மதுரை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

மதுரை – தேனி இடையே 12 ஆண்டுகளுக்கு முன்னர் மீட்டர்லைனாக செயல்பட்டு வந்த ரயில் சேவை பின்னர் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இந்த ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் நடந்து வந்தன.

இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த மே 27ம் தேதி முதல் மதுரை – தேனி இடையே பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது. தினமும் ஒருமுறை மதுரை – தேனி, தேனி – மதுரை இடையே இந்த ரயில் சேவை நடைபெறுகிறது.

அந்த ரயில் பாதையில் கடந்த 12 ஆண்டுகளாக ரயில்கள் செல்லாமல் இருந்ததால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. தற்போது ரயில் சேவை தொடங்கப்பட்ட பின்னரும் கூட மக்கள் ரயிலை அலட்சியம் செய்து தண்டவாளத்திலேயே நடந்து செல்வதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதுகுறித்து பேசிய மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் “ரயில் வரும்போது தண்டவாளத்தில் மக்கள் நடந்து செல்வதால் மதுரை – தேனி இடையே ரயில் இயக்குவது சவாலாக உள்ளது. 100 கி.மீ வேகத்தில் ரயில் வரும்போது அருகில் நடந்து செல்கின்றனர். ரயில் அருகே செல்பி எடுக்கின்றனர். ரயில் வருவது தெரிந்தாலும் தண்டவாளத்தில் நடந்தே செல்கின்றனர்” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடனே கூட்டத்த கலைங்க..! ஓபிஎஸ் வந்ததும் சிதறிய எடப்பாடியார் டீம்!