Publish Date: Wed, 18 May 2022 (11:39 IST)
Updated Date: Wed, 18 May 2022 (11:40 IST)
கொரோனா காரணமாக மதுரை கோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த பாசஞ்சர் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு ரயில்வே கோட்டங்களிலும் பாசஞ்சர் ரயில்கள் செயல்பட்டு வந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து பாசஞ்சர் சேவைகளும் நிறுத்தப்பட்டன.
சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மதுரை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பாசஞ்சர் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, மதுரை – ராமேஸ்வரம், திருச்செந்தூர் – திருநெல்வேலி, திருநெல்வேலி – செங்கோட்டை ஆகிய வழித்தடங்கள் வழியாக வருகிற 30ம் தேதி முதல் பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.