Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளம் வயதில் மகன் மரணம்...கல்லறையில் கி.யூ.ஆர்.கோட்-ஐ பதித்த பெற்றோர்

Advertiesment
kerala
, வியாழன், 23 மார்ச் 2023 (19:09 IST)
கேரளாவில் இளம் வயதில் உயிரிழந்த மகனின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டி, கல்லறையில், கியூ.ஆர். கோட்-ஐ  பதித்துள்ளனர்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குரியாச்சிராவச் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மனைவி லீனா. இவர்களின் மகன் ஐவீன் பிரான்சிஸ் உடன் ஓமன் நாட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, இசை மற்றும் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு பேட்மிட்டன் விளையாடும்போது, திடீரென்று மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.

மகனின் இழப்பைத் தாங்க முடியாத பெற்றோர், தங்களின் சொந்த ஊரான கேரள மாநிலம் குரியாச்சிரா பகுதியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லறையில் அடக்கம் செய்தனர்.

தங்கள் மகனின் நினைவில் இருந்த பெற்றோர் அவது பெயரில், இணையதளம் உருவாக்கினர். மேலும் தங்களின் மகனின் வாழ்க்கை வரலாறு மற்றவர்க்கு தூண்டுதலாக இருக்க வேண்டுமென்று அவரது  கல்லறையின் மேல், கி.யூ.ஆர் கோட் ஆக பதித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதினை கைது செய்தால் ஜெர்மனி மீது போர்: - ரஷ்ய முன்னாள் அதிபர் எச்சரிக்கை