Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து ரூ.79.5 லட்சம் மீட்பு: இருவர் கைது!

Advertiesment
சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து ரூ.79.5 லட்சம் மீட்பு: இருவர் கைது!
, புதன், 24 பிப்ரவரி 2021 (15:22 IST)
சென்னை விமானநிலையத்தில் அடுத்தடுத்து ரூ.79.5 லட்சம் மதிப்புடைய தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு 2 பயணிகள் கைது செய்யப்பட்டனா்.

 
துபாயிலிருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.72 லட்சம் மதிப்புடைய 1.5 கிலோ தங்கம், சென்னையிலிருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.7.5 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, வேலூா், ராமநாதபுரத்தை சோ்ந்த 2 பயணிகள் கைது.
 
துபாயிலிருந்து எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று காலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதணையிட்டனா்.அப்போது ஒரு ஆண் பயணி சுங்க சோதணைக்கு முன்னதாக அப்பகுதியில் உள்ள கழிவறைக்கு சென்றவா் சுமாா் ஒரு மணி நேரமாக வெளியே வரவில்லை.
 
இதை கவனித்துக்கொண்டிருந்த சுங்கத்துறையினா், பின்பு கழிவறை கதவை தட்டி பயணியை வெளியே வரவழைத்தனா். அவா் வேலூரை சோ்ந்த அஜ்மல்கான்(26). அதன்பின்பு அவரை முழுமையாக பரிசோதித்தனா். அவருடைய உள்ளாடைகளுக்குள் 1.5 கிலோ  தங்கக்கட்டிகள் மற்றும் தங்க பேஸ்ட்டை மறைத்து வைத்திருந்தாா். அதன் சா்வதேச மதிப்பு ரூ.72 லட்சம். இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்து பயணி அஜ்மல்கானை கைது செய்தனா்.
 
இந்நிலையில் இன்று அதிகாலை சென்னையிலிருந்து துபாய் செல்லும் ஃபிளை துபாய் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் புறப்பட தயாரானது. அதில் பயணிக்க வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதணையிட்டனா். அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த ரகுமான் ஹமீது(25) என்பவரை சோதனையிட்டனா். அவருடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.7.5 லட்சம் மதிப்புடைய சவுதி ரியால் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனா். அதோடு அவா் பயணத்தை ரத்து செய்து,கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல் சாப்போ மனைவி கைது - போதைப்பொருள் கடத்தியதாக வழக்கு