Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு கடன்: சிறப்பு முகாம் குறித்த தேதி அறிவிப்பு..!

Advertiesment
TN assembly

Siva

, வெள்ளி, 5 ஜனவரி 2024 (07:46 IST)
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் ஒரு வாரம் நடைபெற இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான தேதியையும் அறிவித்துள்ளது

கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏராளமான சிறு வணிகர்கள் தங்கள் உடைமைகளை இழந்தனர். இதனால் பெரும் நஷ்டத்தில் இருக்கும் சிறு வணிகர்கள் மீண்டும் தங்கள் தொழிலை ஆரம்பிப்பதற்காக கடன் வழங்க சிறப்பு முகாம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டத்தில் உள்ள சிறு வணிகர்களுக்கு கூட்டுறவு துறையின் மூலம் முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிக கடன் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட உள்ளன.


இதற்கான சிறப்பு முகாம்கள் மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் ஜனவரி 5ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி  கொண்டு கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்.. 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!