Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெய்லர் அக்கா மீது அவதூறு கருத்து! பிரபல யூட்யூபர் பிரியாணி மேன் கைது!

Advertiesment
Biriyani man

Prasanth Karthick

, செவ்வாய், 30 ஜூலை 2024 (09:19 IST)

யூட்யூபில் பிரபலமாக உள்ள பிரியாணி மேன் பெண் ஒருவரை தகாத வார்த்தைகளால் பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தமிழ் யூட்யூப் சேனல்களில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சேனல்களில் ஒன்று பிரியாணி மேன். தன்னை பிரியாணி மேன் என்ற பெயரில் வைத்துக் கொண்டு அபிஷேக் என்பவர் இந்த சேனலை நடத்தி வருகிறார். அதில் பலத்தரப்பட்ட விஷயங்கள் குறித்தும் தனக்கே உரிய நையாண்டி தனத்துடன் கிண்டலாக பேசி வந்தார் பிரியாணி மேன். சமீபத்தில் பிரபலமான டெய்லர் பெண்மணி ஒருவர் பணமோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

 

ஆனால் அந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என மற்றொரு யூட்யூப் சேனல் வீடியோ வெளியிட்டனர். இதனால் தனது வீடியோவை பிரியாணி மேன் நீக்கி இருந்தாலும் நெட்டிசன்கள் அவரை கடுமையாக கண்டிக்கவும், ட்ரோல் செய்யவும் தொடங்கிவிட்டனர். இதனால் சமீபத்தில் பிரியாணி மேன் லைவ் வீடியோ போட்டு அதில் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றார். பிரியாணி மேனின் தாயார் அவரை காப்பாற்றும் காட்சிகளும் லைவ் வீடியோவில் வந்து பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய செய்தது.

 

இந்நிலையில் பெண்களை இழிவாக பேசியது குறித்து பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரியாணி மேன் அபிஷேக், பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞர்களிடையே பிரபலமாக பப்ஜி மதன், டிடிஎஃப் வாசன் கைதுகளை தொடர்ந்து பிரியாணி மேனும் கைது செய்யப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு எப்போது? மருத்துவக் கலந்தாய்வு குழு அறிவிப்பு..!