சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆறு காவல்துறை ஆய்வாளர்களை திடீரென மாற்றி காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இவர்களில் ராஜீவ் என்ற ஆய்வாளரும் ஒருவர். இவர் தலைமைச்செயலக காலனி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டு வருகிறார். இவர் சமீபத்தில் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டல் விடுத்த காவல்துறை ஆய்வாளர் ராஜீவை செக்ரெட்ரியேட் காலனி காவல் நிலையத்திலிருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். இவருடன் மேலும் 5 காவல்துறை ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சிவசுப்பு என்பவர் வில்லிவாக்கம் பகுதிக்கும், ஸ்ரீனிவாசன் என்ற ஆய்வாளர் திருவல்லிக்கேணி பகுதிக்கும், இளவரசு என்ற ஆய்வாளர் மெரீனா பகுதிக்கும், நித்யகுமாரி என்ற ஆய்வாளர் ராயபுரம் பகுதிக்கும் செல்லமுத்து என்பவர் செகரட்டரி காலனி பகுதிக்கும் மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சற்றுமுன்னர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.