Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சைலேந்திரபாபு உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்

சைலேந்திரபாபு உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்
, சனி, 7 அக்டோபர் 2017 (07:20 IST)
சிறைத்துறை டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு உள்பட 14 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நேற்று திடீரென பணிமாற்றம் செய்யப்பட்டனர். பணிமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் விபரம் பின்வருமாறு:



 
 
1. தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக இருந்து வந்த கே.பி.மகேந்திரன் தீயணைப்புத்துறை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். 
 
2. ரெயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.யாக பணிபுரிந்த லட்சுமி பிரசாத் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக பதவியேற்பார்.
 
3. சிறைத்துறை இயக்குனராக இருந்து வந்த சி.சைலேந்திரபாபு தமிழக ரெயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். 
 
4. அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த அசுதோஷ் சுக்லா தமிழக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பேற்பார்.
 
5. தமிழ்நாடு போலீஸ் போக்குவரத்து பிரிவு சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்த ராஜேஷ்தாஸ் அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவியேற்பார். 
 
6. மாநில குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யான சுனில்குமார் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
 
7. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றும் கரன்சின்கா போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். 
 
8. போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கூடுதல் டி.ஜி.பி.யான அமரேஷ் பூஜாரி மாநில குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பேற்பார்.
 
9. அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்து வந்த சங்கர் சேலம் போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். 
 
10. சேலம் போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வந்த சஞ்சய்குமார் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
11. பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக பதவி வகித்து வந்த அசோக் குமார் தாஸ் சென்னை தொழில்நுட்ப பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். 
 
12. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி.யான கல்பனா நாயக் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக (நிதி நிறுவன வழக்குகள்) பதவியேற்பார்.
 
13. தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி.யாக பணிபுரிந்து வந்த செந்தாமரைக்கண்ணன் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி.யாக பொறுப்பேற்பார். 
 
14. திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி.யாக இருந்து வந்த தீபக் எம்.தாமோர் சென்னை ரெயில்வே போலீஸ் டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்மல்லையாவிடம் சலுகை பெற்றாரா சோனியா காந்தி: ரிபப்ளிக் டிவியின் திடுக்கிடும் செய்தி