Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

80 வயதில் எனது ஞானத் தந்தையை இழந்துவிட்டேன் - சிவகுமார் வேதனை!

80 வயதில் எனது ஞானத் தந்தையை இழந்துவிட்டேன் - சிவகுமார் வேதனை!
, செவ்வாய், 18 மே 2021 (12:31 IST)
நடிகர் சிவகுமார் மறைந்த சாகித்ய அகாதமி விருது வென்ற எழுத்தாளரான கி.ரா புகழஞ்சலி பகிர்ந்துள்ளார். 

 
தமிழ் இலக்கிய சூழலில் பல நெடுகாலமாக பல்வேறு சிறுகதைகள், நாவல்கள் உள்ளிட்ட பல படைப்புகளை கொடுத்தவர் கி.ராஜநாராயணன். சாகித்ய அகாதமி விருது வென்ற எழுத்தாளரான கி.ரா தனது 99 வயதில் உடல்நல குறைவால் காலமானார்.
 
அவரது இழப்பிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சிவகுமார் புகழஞ்சலி பகிர்ந்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நான் பிறந்த பத்து மாதத்தில் என் தந்தையை இழந்துவிட்டேன். தற்போது 80 வயதில் எனது ஞானத் தந்தை 99 வயது வாழ்ந்த கி.ரா.-வை இழந்துவிட்டேன். 
 
கி.ரா. அவர்களும், கணபதி அம்மாளும் எனக்கு இன்னொரு தாய் - தந்தையர். எனக்கு அவருக்கும் 35 வருட காலமாக உறவு உண்டு. அவர் சம்பந்தபட்ட பல விழாக்களில் புதுச்சேரி சென்று கலந்துகொண்டிருக்கிறேன். அந்த மகத்தான மனிதர் கரிசல் மண்ணை பற்றி எழுதிய கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், கரிசல்காட்டு கடுதாசி, வட்டார வழக்கு சொல்லகராதி போன்ற அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார்.
 
அவரது ஆன்மா சாந்தியடையட்டும். இந்தக் கொரோனா பொது முடக்கத்தால் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செய்ய முடியாயததற்கு மனமார வருந்துகிறேன். மீண்டும் அவரது சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பணியில் 269 மருத்துவர்கள் மரணம்! – அதிர்ச்சி ரிப்போர்ட்!