தமிழகத்தில் இன்று காலை 10 மணிக்கு பிளஸ் 2 ரிசல்ட் வெளிவரவுள்ளது. மாணவர்கள் வெகு ஆர்வமாக இந்த ரிசல்ட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரி வாழ்க்கையை முடிவு செய்வது இந்த பிளஸ் 2 மார்க் என்பதால் இந்த தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்கள் ஒவ்வொரு மாணவர்களுக்கும் மிகவும் முக்கியமானது
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் தேர்வு முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். தேர்வு முடிவு எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் மாணவர்கள் இருக்க வேண்டும். மதிப்பெண்கள் நாம் படிக்கும் படிப்பை மட்டுமே நிர்ணயம் செய்கிறது, நமது வாழ்க்கையை அல்ல. எனவே வாழ்க்கையில் இன்னும் நீண்ட காலம் பயணிக்க வேண்டிய மாணவர்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்
ஒவ்வொரு வருடமும் மதிப்பெண் குறைந்த மாணவர்கள், தேர்ச்சி பெறாத மாணவர்களின் தற்கொலை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இந்த வருடம் அதுபோன்ற ஒரு நிகழ்ச்சி கூட நடக்கக்கூடாது என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.