பிரபல தொழிலதிபரும், கல்வி நிறுவனரும், ராம்கோ குரூப் அதிபருமான ராமசுப்பிரமணிய ராஜா சற்று முன்னர் காலமானார். அவருக்கு வயது 83. கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த அவர் ராஜபாளையம் நகர் மக்களின் பெரும் அன்பை பெற்றவர்
இந்தியாவின் பல நகரங்களில் மட்டுமின்றி இலங்கை உள்பட பல வெளிநாடுகளில் உற்பத்தி ஆகி வரும் சிமெண்ட் ராம்கோ சிமெண்ட். இந்த சிமெண்ட் ஆலை மட்டுமின்றி ஸ்பின்னிங் மில்ஸ் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்களுக்கு சொந்தக்காரர். மேலும் இவரது பெயரில் பல கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றனர்.
இவ்வாறு ராஜபாளையம் மக்களுக்கு கல்வி, தொழில், வேலைவாய்ப்பு ஆகியவைகளை அளித்த வந்த ராமசுப்பிரமணிய ராஜாவின் மறைவு அந்நகர் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.