Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாய்களால் விபத்து ஏற்பட்டால் உரிமையாளர்தான் பொறுப்பு: அதிகாரிகள் அறிவிப்பு..!

Advertiesment
Street Dogs
, வியாழன், 13 ஏப்ரல் 2023 (17:49 IST)
நாய்களால் விபத்து ஏற்பட்டால் அந்த நாயை வளர்க்கும் நாய்களின் உரிமையாளர்கள் தான் பொறுப்பு என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
சிவகங்கை நகரில் நாளுக்கு நாள் நாய்கள் அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து சிவகங்கை நகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நாய்கள் மூலம் நடந்து செல்வோர் வாகனத்தில் செல்வோர் ஆகியோர்களுக்கு விபத்து ஏற்பட்டால் நாய்களின் உரிமையாளர்களை பொறுப்பு என்றும் ஆனால் இதுவரை நாய்களால் ஏற்பட்ட விபத்துகளில் நாய்களின் உரிமையாளர்கள் மீது காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் சிவகெங்கை நகராட்சியில் 650-க்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளதாகவும் நாய்களுக்கு கருத்தடை செய்ய கடந்த ஆண்டு 2 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது என்றும் ஆனால் இதுவரை கருத்தடை செய்யவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிலவில் இருந்து பார்த்தால் தமிழ் தெரியும்: 100 ஏக்கர் பரப்பளவில் தமிழக அரசின் காடு..!