கொரோனா இரண்டாம் அலையின் போது தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கொரோனா சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டன.
அதில் அதிக அளவு சித்தா மருத்துவமனை முகாம்களும் அடக்கம். அப்படி வேலூர் வி ஐ டி பல்கலைக்கழகத்தில் இயங்கி வந்த சித்த மருத்துவமனை முகாம் மூடப்பட்டுள்ளது. இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து படிப்படியாக தொற்று எண்ணிக்கை சரிந்து வருவதால் மூடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் மூன்றாம் அலையைக் கணக்கில் கொண்டு தயாராக வைக்கப்பட்டு இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.