ஒட்டப்பிடாரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தாவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாடுவேன் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, ”ஒட்டப்பிடாரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும்; கவர்னகிரி வாக்குச் சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும்; ஒட்டப்பிடாரம் தொகுதியில் உளவுத்துறையினர் ஆரம்பத்தில் இருந்தே என்னை கண்காணித்து வந்தனர்.
பணப்பட்டுவாடா செய்து எல்லா விதத்திலும் என் வெற்றியை தடுக்க அதிமுக சூழ்ச்சி செய்தது; அதனால்இந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் நடத்த வேண்டும்; இல்லையென்றால் உச்சநீதிமன்றத்தை நாடுவேன்” என்று கூறியுள்ளார்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....