ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்: கருணாநிதி சூளூரை
ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்: கருணாநிதி சூளூரை
தமிழக சட்டப்பேரவையில் ஆக்கப் பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என திமுக தலைவர் கருணாநிதி சூளுரைத்துள்ளார்.
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளிட்டுள்ள அறிக்கையில், தமிழகச் சட்டப் பேரவையில் ஆக்கப் பூர்வமான வகையில் நல்லதோர் எதிர்க்கட்சியாக மக்களின் பிரச்சினைகளை முன் வைத்துப் பணியாற்றும் என்ற நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் இந்தத் தேர்தலில் வெற்றி முகட்டினை சட்ட ரீதியாக எட்டிப் பிடிப்பதில் மிகச் சிறிய இடைவெளி ஒன்று ஏற்பட்டு விட்டது என்பது தான் உண்மை. ஆனால் தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வலிவுடன் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சியாகச் செயல்படக் கூடிய வாய்ப்பு திராவிட முன்னேற்றக் கழகத்திற்குக் கிடைத்துள்ளது.
இந்த வாய்ப்பினை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி, தமிழகச் சட்டப் பேரவையில் ஆக்கப் பூர்வமான வகையில் நல்லதோர் எதிர்க்கட்சியாக மக்களின் பிரச்சினைகளை முன் வைத்து திமுக பணியாற்றும் என்று தெரிவித்துள்ளார்.