Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது..!

Mahendran
புதன், 15 ஜனவரி 2025 (12:44 IST)
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சென்னை ஐஐடி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஐஐடியில் படித்து வரும் ஒரு மாணவி, விடுதியில் தங்கியிருந்தபோது, நேற்று பொங்கல் பண்டிகையை ஒட்டி  கோட்டூர்புரத்தில் உள்ள டீக்கடைக்கு டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வேலை பார்க்கும் வாலிபர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதனை அடுத்து அந்த மாணவி கோட்டூர்புரம் போலீசில் புகார் அளித்ததாகவும் தெரிகிறது.

இதையடுத்து, போலீசார் அந்த டீக்கடைக்கு விரைந்து வந்து, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை விசாரணை செய்ததில், அவர் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் ஸ்ரீராம் என்றும், வயது 29 என்றும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கின்றன.

மாணவியின் புகாரின் பேரில், அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்விட்டரை அடுத்து டிக்டாக் செயலியை வாங்குகிறாரா எலான் மஸ்க்? பரபரப்பு தகவல்கள்..!

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' கிராமியக் கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வர் அறிவிப்பு..!

பெரியாரை எதிர்த்ததற்காக சீமானை பாராட்டுகிறேன்.. துக்ளக் விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி..!

400 கோடிக்கு மேல் பந்தயம்.. தடையை மீறி களைகட்டும் சேவல் சண்டை..!

தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுகிறாரா? அடுத்த வாரம் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்