கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று பொங்கல் தினத்தில் தங்கம் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் இன்று ஒரு கிராமுக்கு பத்து ரூபாய், ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. இதையடுத்து, பொங்கல் தினத்தில் தங்கம் வாங்க விரும்புபவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும், கடந்த வாரத்தை விட இந்த வாரம் 100 ரூபாய்க்கு மேல் ஒரு கிராமுக்கு தங்கம் விலை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 7,330 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 58,640 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,996 எனவும் ஒரு சவரன் ரூபாய் 63,968 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 100.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 100,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது