கேரள மாநிலம் பத்தனம்திட்டா என்ற பகுதியைச் சேர்ந்த 18 வயது விளையாட்டு வீராங்கனையை 64 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் நிலையில் இது குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட மாணவி தனது 13 வயதில் இருந்து பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. மாணவியின் இந்த புகார் கேரள மாநிலத்தில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அந்த மாணவியரிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் அந்த மாணவிக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டது. அப்போது 2019 ஆம் ஆண்டு முதல் தன்னை இதுவரை 64 பேர் வன்கொடுமை செய்ததாக கூறிய நிலையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் போக்சோ சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் மாணவியின் காதலன், அவரது நண்பர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், ஆட்டோ டிரைவர்கள், மீன் வியாபாரிகள், பள்ளி மாணவர்கள் என மாணவர்கள் என பலரும் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மற்றவர்களை தேடி வருவதாகவும் இதுகுறித்து சிறப்பு புலனாய்வு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த குழு விரைவில் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.