விக்கிரவாண்டி அருகே கழிவுநீர் தொட்டியில் பள்ளி சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர் , ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், மூவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்ட நீதிபதி நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி படித்த மாணவி ஒருவர் கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த நிலையில், அவருடைய தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி தாளாளர் மற்றும் வகுப்பு ஆசிரியர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்,
இந்த வழக்கில் ஜாமீன் கோரி மூவரும் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், விழுப்புரத்தில் பெய்த கனமழையின் காரணமாக தொட்டி பராமரிக்கப்படாமல் இருந்ததால் குழந்தை வழிமாறி சென்றதன் காரணமாக இந்த நிகழ்வு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பில் காட்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி மூவரும் சென்னையில் ஒரு வாரம் தங்கி இருந்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையளவு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், பள்ளியின் தாளாளர் முதல்வர் ஆகிய இருவரும் சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.